Posts

Showing posts from January, 2023
Image
Diary களை  காதலிப்பவள் நான்  முன் கட்டிளமை பருவம் என்பார்களே  அந்த வயது முதலே  என் வரிகள் அரங்கேரிய  மேடையவை...  என்னை புறக்கணிக்காது  என் உணர்வுகளை அப்படியே ஏற்றுக்கொள்ளும் தன்மை கொண்டவை அவை...!  என் பேச்சுக்கள்  சங்கீதமோ...   சகிக்கவில்லையோ... சந்தோஷமாய்  தாங்கிக் கொள்ளும்  தாராள மனம் கொண்டவை அவை  சிறு இன்பமோ  பெரும் துன்பமோ  வெற்றியோ  தோல்வியோ  ஏமாற்றங்களோ எதிர்பார்ப்புகளோ  இன்னும்..... எத்தனை எத்தனையோ....  என் உணர்வலைகளை  மொத்தமாய் வாங்கிக் கொள்ளும்  உணர்வுப் பெட்டகம் அவை முத்து முத்தாய்  என் எழுத்துக்களை  வரிகளில் பதிக்க  காலம் அவ்வளவு இடம் தரவில்லை எனக்கு  நறுமணமிக்க திருமணத்திற்கு முந்தநாள் வரையில்  என் உணர்வுகளின் பெட்டகங்கள் என்னோடிருந்தன  திருமணத்தின் பின் கணவனுக்கும் மனைவிக்கும்  இடைப்பட்டதாய்  என்ன ரகசியம் வேண்டியிருக்கு  Diaryகளில் பதிவுயுமளவிற்கு  இருந்தாலும்.,  Diaryகளை காதலிப்பவள் நான்...!  படம் :  ...