அதிக வலி தரும் இழப்புக்கள்
இழப்புக்கள் அதிகம் வலிகளைத் தரக்கூடியன... கண்டதிலும்... கேட்டதிலும்... அனுபவத்திலும்... புரிந்து கொண்டிருக்கிறேன். இன்றைய தினம் நண்பியொருத்தியின் Nafeesa NM வாப்பாவின் வபாத் இதே 23 ஒரு ஒக்டோபரில் அவள் பிறந்திருந்தாள் 'யூனானி வைத்தியர்' என்ற பெயரை இன்று அவள் தாங்கி நிற்க.. அரும் பாடுபட்ட மனிதர் அவளது வாப்பா...!! வாய்மூடி மௌனித்தாலும் விழிகளறியும் உள்ளத்தின் வலிகளை.. என் வகுப்புத் தோழிகளின் பெற்றோர் ஒவ்வொருவரையும் ஏதோவொரு வகையில் நான் பரீட்சயப் படுத்திக் கொண்டிருக்கிறேன். இன்றளவும்.... அந்த வகையில் புன்னகை மாறாத அந்தப்பூ முகம் இன்றைய ஜனாஸாவிலும்... சமூகப் பணி செய்யும் சிறந்த மனிதர்.. ரப்புல் ஆலமீன் அருளாளன் அன்னாரை பொருந்திக் கொள்வானாக...! அவருக்கு ஜன்னதுல் பிர்தௌஸை பாக்கியமாக்கி வைப்பானாக....!! Fayasa fasil - writer