நிறைய வடுக்கள்.... பல காயங்கள்.... சில ஒத்தடங்கள்... இன்னும் சில கீறல்கள்... மேடு பள்ளங்கள்... குன்று குழிகள்... அனைத்தையும் கடந்து தானே ஆக வேண்டும்...?! ஒரு வழிப் பாதையில் ; திரும்ப முடியாத வழியில் ; பயணிக்கத் தானே வேண்டும்...?! எல்லாம் ஒரு நாள் முற்றுப் பெறத்தானே வேண்டும்...?! எங்கோ ஒரு மூலையில் எம் ஆத்மா பறிக்கப்படத்தானே வேண்டும்...?! அதனை யாராலும் மறக்க முடியாது. மறுக்கவும் முடியாது. வாழ்க்கையின் விதி அப்படியாகத் தான் எழுதப்பட்டுள்ளது. நான் அருந்த முடியாமல் போன ஒரு அமிர்தம் அவர்.... அவர் முன்னே சென்றுவிட்டார். நாங்கள் பின்னாளில் செல்லத்தான் வேண்டுமென.... இன்றுடன் எனது வாப்பா இறைவன் பக்கமாய் பயணப்பட்டு 20 வருடங்கள் கடந்து விட்டன. இந்த 20 வருடங்களும் எனக்குள் தந்த அனுபவங்கள் பல.... இன்று ஒரு பக்குவப்பட்ட ஜீவனாய்... என் எழுத்துக்கள் உங்கள் முன்னிலையில் விரியும்போது என் வாப்பாவை ஒரு கணம் நினைத்துப் பார்க்கிறேன். கண்ணால் காண முடியாவிட்டாலும் என் மனது தினம் குமுறிக் கொண்டுதான் இருக்கின்றது ; வெடிக்காத எரிமலையாய்...
Posts
Showing posts from August, 2023