Posts

Showing posts from June, 2023

முற்றத்து மல்லிகை

Image
முற்றத்து மல்லிகை  மணக்காதென  வளர்ப்பதையே  விட்டுவிடுகிறோம்  நட்டம் நமக்குத்தான்  என்பதை  மறந்தே விடுகிறோம்  Fayasa fasil - writer

சிறு களஞ்சியம் தான்

Image
சிறு களஞ்சியம் தான். விரல் விட்டு எண்ணக் கூடிய சில புத்தகங்கள் தான் என் கையிருப்பில்…  ஆனால்…,  அரும் பெரும் புத்தகச் சேர்வைகள் கொண்ட பெரிய நூலகத்தின் சொந்தக்காரி நான் என் கனவுக் கோட்டையில்…  இருக்க..,  ஒரு திட்ட வேலைக்காய் எடுத்து வைத்த சிறு பனுவலைக் காணவில்லை.  தொலைந்தது எப்படி..?  எனக்கே தெரியவில்லை.  கோபம் , சோர்வு , கவலை எல்லாம் ஒருங்கே அரங்கேற கொஞ்சம் பொறுமையாய் இருந்தேன்.  சிறிது நேரம் சென்று வேறொரு வேலைக்காய் pastels தேடிக்கொண்டிருக்கையில் வைத்த இடத்திலேயே என்னைப் பரிதாபமாய் பார்த்துக்கொண்டிருந்தது தொலைந்த  இல்லை.. இல்லை..  நான் தொலைத்ததாக நினைத்த  அந்தப்பனுவல்..  நெற்றியில் உள்ளங்கை வைத்து உட்கார்ந்து விட்டேன் சிறு புன்னகையுடன்… குறிப்பு :  #மஹ்ஜபீன்  நாவலையும்  #கவலைப்படாதே  புத்தகத்தையும் நீண்ட காலமாக தேடுகிறேன்..  கண்ணில் அகப்படவில்லை..  பெறக் கூடிய இடங்கள் தெரிந்தவர்கள் தயவாய் கீழே கமெண்ட் பண்ணவும்..  Fayasa Fasil - Writer