மின்னும் தாரகை நூலில் இடம் பிடித்த கஹட்டோவிட்ட தாரகைகள்*
*
சிரேஷ்ட ஊடகவியலாளரும் அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஓய்வுநிலை தகவல் அதிகாரியும் படைப்பிலக்கியவாதியும் அரச அங்கீகாரம் பெற்ற சிங்கள -– தமிழ் மொழிபெயர்ப்பாளருமான கலாபூஷணம் நூருல் அய்ன் நஜ்முல் ஹுசைனின் இலங்கை முஸ்லிம் பெண் எழுத்தாளர்கள் பற்றிய ஆய்வுத்திரட்டு நூலான "மின்னும் தாரகைகள்" எனும் நூல் 2018/11/11 அன்று வெளியிடப்பட்டது.
மலையகத்தின் முன்னணி எழுத் தாளரான கலாபூஷணம் நயீமா சித்தீக் தலைமையில் நடைபெறும் இந் நிகழ்வில் முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
இலங்கையின் தலை சிறந்த முஸ்லிம் பெண் எழுத்தாளர்களை கண்டுபிடித்து இந்நூலை உருவாக்கியதில் கஹட்டோவிட்ட மண்ணின் 3 செல்வங்ககளின் பெயர்கள் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
1. *லுத்பியா லுக்மான்*
காத்தான்குடியை பிறப்பிடமாகவும் கஹட்டோவிட்டவை வசிப்பிடமாகவும் கொண்ட இவர் "உணர்வுகளின் ஓலம்" என்ற கவிதை நூலின் மூலம் இலங்கை இலக்கியத்திற்கு அணி சேர்த்தவர்.
முதன் முதலில் ஆரம்பப்பாடசாலையில் "பூ" எனும் தலைப்பில் கவிதை எழுதி அதற்கு வரவேற்பும் கிடைத்ததை அடுத்து தொடர்ச்சியாக எழுத ஆரம்பித்தார்.
இவருடைய ஆக்கங்கள் தினகரன்,வாரமஞ்சரி,தினக்குரல்,விடிவெள்ளி,வேகம் போன்றவற்றில் பிரசுரமாகியுள்ளன. அவ்வாறே சூரியன் FM,சக்தி FM,தென்றல் FM ஆகிய வானொலி அலைவரிசைகளிலும் ஒளிபரப்பாகியுள்ளன.
"உணர்வுகளின் ஓலம்" கவிதைத்தொகுப்பு 2009/11/6 இல் இவர் பாடசாலை மாணவியாய் இருந்த காலத்தில் வெளியானது.
இன்று முகநூலிலும் தனது ஆளுமைகளை வெளிப்படுத்தி வரும் இவர் தனது மற்ற நூலை "இதய வீணை" எனும் பெயரில் விரைவில் வெளியிடவுள்ளார்.
*நிஹாஸா நிஸார்*
கவிதாயினி நிஹாஸா நிஸார் ஆரம்பப் பாடசாலை முஸ்லிம் பாலிகா வித்தியாலயத்தில் படிக்கும் போதே கவிதைத்துறையில் ஆர்வம் கொண்டவர்..
2011 இல் வேகம் பதிப்பகத்தின் உரிமையாளர் அஸாமின் உதவியுடன் "கண்ணீர் வரைந்த கோடுகள்" என்ற தலைப்பில் கவிதை நூலை வெளியிட்டார்.
இவர் தற்போது தனது துணைவருடன் கட்டாரில் வசித்து வருகிறார்.
கடல் கடந்து வாழ்ந்தாலும் இலக்கியத்துறையில் இவருக்கு உள்ள ஆர்வம் மென் மேலும் வளர வேண்டும்.
*பயாஸா பாஸில்*
மாவனல்லையை பிறப்பிடமாகவும் கஹட்டோவிட்டவை வசிப்பிடமாகவும் கொண்ட இவர் வளர்ந்து வரும் எழுத்தாளர்களுள் சிறந்த ஒருவர்.
சிறு வயதிலிருந்தே எழுத்துத் துறையில் ஆர்வம் கொண்ட இவர் கஹட்டோவிட்ட வில் ஊரில் வெளியிடப்படுகின்ற ஒரே ஒரு சஞ்சிகையான "முஅஸ்கர்" சஞ்சிகையின் ஆசிரியராகவும்,
Siyanenews இணையத்தளத்தின் எடிட்டராகவும் தற்போது பணி புரிந்து வருகிறார்.
தாயே,முன்மாதிரி,தந்தையே உங்களுக்காய் ,தோற்க விரும்புகிறேன்,பேராயுதம் ஆகிய கவிதைகளும் பிரார்த்தனை,ஒரு குடம் தண்ணீர்,தியாகம்,கோடுகள்,விடியாத பொழுது,பரிசு ஆகிய சிறுகதைகளும் இவர் வெளியிட்ட பொக்கிஷங்கள்.
இவருடைய "நானும் ஓர் அனாதை" என்ற கவிதைத்தொகுதி எழுத்துருப்பெற்ற நிலையில் இறுதிக்கட்டத்தில் உள்ளது.
கஹட்டோவிட்ட மண்ணில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற இந்த எழுத்தாளர்களது இலக்கியப் படைப்புகள் எதிர்காலத்திலும் இலக்கிய உலகிற்கு படைப்புகளை வழங்க வேண்டும். என சியனே மீடியா சேர்கிள் மற்றும் கஹட்டோவிட்ட ஊர் சார்பாகவும் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
நன்றி சியனே மீடியா
Comments
Post a Comment