ஷைமா பயணப்பட்டு விட்டாள்...!!

அதிகாலைச் செய்தியது
அதிர்ச்சிக்குள்ளாக்கியது
பெரும்பாலும் அதிகாலையில் வரும் தொலைபேசி அழைப்புக்கள் ஜனாஸா தகவல்களாகவே இருந்திருக்கின்றன..
இன்றைய தினமும் அப்படித்தான்.

சுமார் 4.30 மணியளவில் ஜனாஸா பற்றி அறியக் கிடைத்தது. அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீள முடியவில்லை.

இதே போன்று ஒரு தினத்தில் தான்,
இதே குடும்பத்தில் பிறந்து , வளர்ந்த சஹ்லாவின் ஜனாஸா அறிவிப்புக் கிடைத்தது. அவள் வபாத்தாகி 4 வருடங்கள். இன்று அவள் தங்கையும் பயணப்படுகிறாள்.

சஹ்லாவை எனக்கு நன்கு பரீட்சயம்.. ஷைமா வை அவ்வளவாக பழக்கமில்லை..

சஹ்லா வின் வபாத்தின் பின் ஷைமா எங்கும் போக மாட்டாள்..
பாடசாலை , பள்ளிக்கூடம் என எல்லாவற்றையும் தவிர்த்து இருந்தாள். தாத்தா வின் நினைவுகளில் இருந்து அவளால் மீண்டு வர நீண்ட காலம் எடுத்தது. தாத்தாவுடன் பத்ரியாவுக்கு சென்றுகொண்டிருந்த ஷைமா , சஹ்லாவின் வபாத்தின் பின் நீண்ட கால இடைவெளியின் பின் அவளது மாற்றத்திற்காக பாலிகாவில் சேர்ந்து கல்வியை தொடரலானாள்.

இன்று அவளும் எல்லாவற்றையும் விட்டு பயணப்படுகிறாள்.

ஒற்றுமை என்னவெனில்,
இரு ஜனாஸாக்களும் ..
இரவு சாப்பிட்டு உறங்கிய குழந்தைகள்.. நடுச்சாமத்தில் சுகவீனமுற்று வைத்தியாசாலைக்கு கொண்டுசெல்லப்படுகையில் வபாத்தாகியுள்ளார்கள்.

நான்கு வருட. இடைவெளி மட்டுமே ... மற்றபடி சஹ்லாவின் வபாத் போன்றே ஷைமா வும்..

அதே குடும்பம்....
அதே வீடு...
அதே பெற்றோர்...
அதே இரவு...
அதே வயது...
அதே வெள்ளைத்துணி...
அதே பயணம்...

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி ஊன்

எத்தனையோ தொலைபேசி அழைப்புக்கள்...
எத்தனையோ குறுஞ்செய்திகள்..
அத்தனைக்கும் பதிலளிக்க முடியாமைக்கு வருந்துகிறேன்,

என்ன நடந்தது ...!? என்ற பலரின் கேள்விக்கு என்னிடம் பதிலில்லை..

ஆனால்..,
இரவு சாப்பிட்டு விட்டு தூங்கச் சென்ற பிள்ளை நடுச்சாமத்தில் வலிப்பு (fit) ஏற்பட்டதாகவே அறியக் கிடைத்தது.

சஹ்லாவும் இவ்வாறு தான், இதே அடையாளங்களுடன் வபாத் ஆனாள்...
சஹ்லாவிற்கு வைத்தியர்கள் கொடுத்த ரிப்போர்ட் , காலில் ஏற்பட்ட புண்ணின் மூலம் கிருமித் தொற்று ஏற்பட்டதனால் மரணம் சம்பவித்திருக்கிறது. என்று..,

ஷைமாவின் ஜனாஸா இன்னும் கொண்டுவரப்படவில்லை.

இருந்தாலும்,
இந்தப்பதிவு அனைவருக்குமானது..
உங்கள் துஆக்களில் அந்தப்பிஞ்சுகளை சேர்த்துக் கொள்ளுங்கள்...!!!

அல்லாஹும்மஃ பிர்லஹா
வர்ஹம்ஹா...!!

Fayasa Fasil



Comments

Popular posts from this blog

என் எழுத்துக்கு ஒரு தசாப்தம் நூல் வெளியீட்டு விழாவும் நூல் விமர்சனமும் - லுதுபியா லுக்மான்

சிறு களஞ்சியம் தான்