*முதுசம்*



கஹட்டோவிட்ட  கிராமத்துக்கு மெருகேற்றிய இரண்டு குடும்பங்களின் வரலாற்று பொக்கிஷம்

"வரலாறு தெரியாத சமூகம் ஆணிவேர் அற்ற ஒரு விருட்சத்துக்கு சமம்"

எமது முன்னோர்களின் இருத்தல் பற்றிய அறிவினையும் தெளிவினையும் கண்டு கொள்வதற்கு பழைய கால சுவடிகள் , சிற்றேடுகள் , தொல்பொருள் ஆய்வு சம்பந்தப்பட்ட விடயங்கள் போன்றவை உதவுகின்றன. அந்த வகையில் இவ்வூரில் வாழ்ந்து ஊருக்கு சேவை செய்த இரண்டு குடும்பங்கள் பற்றிய பரம்பரை விளக்கத்தை தருகிறார் ஹாஜியானி கமருன் நிஸா தப்லீஹ். 

தாய் தந்தையருக்கு பின்னரான பரம்பரை அறிவுகளை தேடாத இளம் சமுதாயத்தினர் மத்தியில் இந்நூல் பெரிதும் வரவேற்கத்தக்க விடயமே.  உண்மையில் சிறந்த படைப்பாகவும் தெளிவான விளக்கங்களை உள்ளடக்கியதாகவும் இந்நூல் அமைய பெற்றுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்...!  

நூலாசிரியரின் தேடல் காரணமாக வரலாற்று பொக்கிஷங்களான இரண்டு குடும்பங்கள் பற்றிய பூரணமான விளக்கங்களை எழுத்துருவில் நூல் வடிவில் கையிலே கிடைக்கப் பெற்றிருக்கிறது. 

நூலாசிரியரின் சேவை பாராட்டத்தக்கது...!  இன்னும் காத்திரமான பல படைப்புகளை அவரிடம் இருந்து எதிர்பார்க்கலாம்.  வாழ்த்துக்கள்...!!  

Fayasa fasil - writer

Comments

Popular posts from this blog

என் எழுத்துக்கு ஒரு தசாப்தம் நூல் வெளியீட்டு விழாவும் நூல் விமர்சனமும் - லுதுபியா லுக்மான்

ஷைமா பயணப்பட்டு விட்டாள்...!!

சிறு களஞ்சியம் தான்