Posts

Showing posts from April, 2023
Image
சமுதாயச் சித்திரங்களை இருப்பாக்கி...  கனவுகளை நனவாக்க...  கூட்டுப்புழுக்களாய்...  கிணற்றுத் தவளைகளாய்...  ஒளிந்து கிடக்கும் மானிடப் பெண் வர்க்கத்தின்  பேசப்பட வேண்டிய பருவ  பேசு பொருள் பற்றி  வெகுவிரைவில் உங்களுடன் பேச வருகிறேன்...  இன்ஷா அல்லாஹ்..!! 

கனவொன்று நனவாகிய நாள் 18th April 2023 @ SLBC

Image
ஒருகாலம் வாய்ப்புக்களுக்காக ஏங்கியவள் நான். இப்பொழுதெல்லாம்  என் வீட்டுக் கதவை அந்த  வாய்ப்புக்களே வந்து தட்டும் போது வேண்டாமென்றா சொல்வேன்....???   கிடைக்கும் வாய்ப்புக்களையெல்லாம் பயன்படுத்திக் கொள்ள  வேண்டும். தவறவிட்டு வருந்தக் கூடாது... என்பது என் கருத்து... அழைப்பொன்று எடுங்கள் என சொல்லப்பட்டதற்காய் நானும் தயங்கிய  நாள் அது.  அச்சிறிய அழைப்பு  இவ்வளவு தூரம் என்னை பயணிக்கச் செய்யுமென நான் எதிர்பார்க்கவேயில்லை. அல்ஹம்துலில்லாஹ்...!!  ஒற்றை வார்த்தையில் ஊக்கம் கொண்டேன்.  முத்து முத்தாய் எழுதினேன். எழுத்துக்களை கோர்வை செய்தேன். குரல் பதிவிட்டேன். அக்குரல் இன்று இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவை பகுதியில் ஒலிப்பதிவாக்கப்பட்டது.    உங்கள் காதுகளை வந்தடையும் நாள் மிக விரைவில்.....!!!  ஈத் பெருநாளன்று  கவியரங்கம்.. காலை 9.00 மணிக்கு...  இன்ஷா அல்லாஹ்... கேட்டு மகிழுங்கள்...  நிச்சயம் பின்னூட்டமிடுங்கள்..  என்னை இவ்விடத்தில் இன்று அமரச் செய்த,   என் அத்துணை சந்தோச தருணங்களையும் வானவில...
Image
Alhamdulillah....!!  இன்று காலையில் என் கரம் கிட்டிய இச்சான்றிதழுக்கு நான் நிறையவே கடமைப்பட்டுள்ளேன்..  மிகவும் குறுகிய காலப்பகுதியில்  என் எழுத்துக்கான அங்கீகாரத்தை தந்த ஸ்கை தமிழ் நிர்வாகத்திற்கும் , பணிப்பாளர் Basith JM  அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளும் பிரார்த்தனைகளும்... !!!  Jezakallah khairan for all supports  Fayasafasil-writer ✍🏻 #writer  #skyTamil  #thuninthelu

போட்டியான உலகில் பொறாமை இல்லாது செயற்பட்டவன் இறந்து இன்றுடன் ஓராண்டு

Image
Pathum no more…  Rest in Peace Pathum… 06.04.2023  அன்பு வைத்தவர்களினதும் , உறவினர்களினதும் இழப்புக்கள் எவ்வளவு வலியை தருமோ.. அந்தளவு வலிக்கிறது. எம்மிடம் தொழில் தேடி வந்து சில காலம் தொழில் புரிந்த   pathum இன் இழப்பும்.   சுறுசுறுப்பாக வேலை செய்வதற்கு எறும்பை உதாரணம் காட்டுவோமல்லவா… ஆனால் நாங்கள் pathum ஐ உதாரணம் காட்டுவோம். உழைப்பதில் ஆர்வம் மிக்கவன். சிறந்த உழைப்பாளி , நேர்மையானவன். ஓரளவிற்கு படித்தும் இருக்கிறான் என்பது அவனது பண்பாடுகளில் வெளிப்பட்டது. போட்டியான உலகில் பொறாமை இல்லாது செயல் பட்டான்.   அகத்தின் அழகு முகத்தில் தெரிந்தது.  பிள்ளைகளுடன் அலாதிப் பிரியம் கொண்டவன். 36 வயதினைக் கொண்ட pathum நான்கு பிள்ளைகளின் தந்தை, வறிய குடும்பம் தான். சிறிய வீடு தான். ஆனாலும் அவனது முகத்தில் எப்போதும் சிரிப்பிற்கு பஞ்சமே இல்லை. அவனுடன் பேசுவோர் அனைவரின் முகத்திலும் சிரிப்பு தவழும் படி செய்து விடுவான். தவறு செய்ய மாட்டான். வேலைக்கு ஏதும் பொருள் குறைபாடு இருந்தால் அவனே சென்று எடுத்து வருவான். ஏதேனும் தவறுதலாக நிகழ்ந்து விட்டால் அவனை ஏசுவதற்கு கூட ...