கனவொன்று நனவாகிய நாள் 18th April 2023 @ SLBC
ஒருகாலம் வாய்ப்புக்களுக்காக ஏங்கியவள் நான். இப்பொழுதெல்லாம் என் வீட்டுக் கதவை அந்த வாய்ப்புக்களே வந்து தட்டும் போது வேண்டாமென்றா சொல்வேன்....???
கிடைக்கும் வாய்ப்புக்களையெல்லாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தவறவிட்டு வருந்தக் கூடாது... என்பது என் கருத்து...
அழைப்பொன்று எடுங்கள் என சொல்லப்பட்டதற்காய் நானும் தயங்கிய நாள் அது. அச்சிறிய அழைப்பு இவ்வளவு தூரம் என்னை பயணிக்கச் செய்யுமென நான் எதிர்பார்க்கவேயில்லை.
அல்ஹம்துலில்லாஹ்...!!
ஒற்றை வார்த்தையில் ஊக்கம் கொண்டேன். முத்து முத்தாய் எழுதினேன். எழுத்துக்களை கோர்வை செய்தேன். குரல் பதிவிட்டேன். அக்குரல் இன்று இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவை பகுதியில் ஒலிப்பதிவாக்கப்பட்டது.
உங்கள் காதுகளை வந்தடையும் நாள் மிக விரைவில்.....!!!
ஈத் பெருநாளன்று கவியரங்கம்.. காலை 9.00 மணிக்கு...
இன்ஷா அல்லாஹ்...
கேட்டு மகிழுங்கள்...
நிச்சயம் பின்னூட்டமிடுங்கள்..
என்னை இவ்விடத்தில் இன்று அமரச் செய்த,
என் அத்துணை சந்தோச தருணங்களையும் வானவில்லாய் ஜொலிக்கச் செய்யும் என் கணவர் Irshad Mohamed அவர்களுக்கும் , மீலாத் கவியரங்கம் மூலம் என்னை மேடையேற்றி என் குரலை காற்றில் தவழ விட்ட இந்நாள் சியன மீடியா தலைவர் , முன்னாள் இலங்கை வானொலி முஸ்லிம் சேவை பணிப்பாளர் Mohamed Zackariya Ahmed Munawwar அவர்களுக்கும், என் திறமை கண்டு எனக்கு அழைப்புச் செய்த தயாரிப்பாளர் Raleem AMM அவர்களுக்கும் என் பற்றிய அறிமுகத்தை Raleem sir அவர்களுக்கு வழங்கிய அறிவிப்பாளர் , சகோதரர் Fazhan Nawas அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
அத்தோடு புது முகங்களாய் இன்று எனக்கு அறிமுகமான, எல்லா விதத்திலும் ஒத்துழைத்து உதவி புரிந்த கவியரங்கத் தலைவர்
கொழும்பு ஸாஹிரா கல்லூரி ஆசிரியர் Yarl Azeem , கவிஞர்களான
மலாய்க்கவி டிவான்சோ
அகரம் சஞ்சிகை ஆசிரியர் Nafeel Abafeel ,
கவிஞர் Farhath Siddique ,
கவிதாயினி Noorul Isra
கவிதாயினி shifaniya fowzul
ஆகியோரையும் நன்றியுடன் நினைவு கூறுகிறேன்..
உங்கள் அனைவருக்கும் அருளாளன் நிறைந்த பரகத்தையும் ரஹ்மத்தையும் பொழிவானாக....!!
Fayasa fasil - writer
Comments
Post a Comment