பூஞ்சிட்டே முபஷ்ஷிரா....!
பூஞ்சிட்டே முபஷ்ஷிரா....
என் பேனா முனையின் இன்றைய பேசு பொருள் நீ
கஹட்டோவிட்ட பூமி ஈன்றெடுத்த பூஞ்சிட்டு நீ
பூவாகி காயாகி
கிளை பரப்பும் நிழல் மரமாய் மாறுவதற்கு முன்
பூஞ்சிட்டாகவே நீ
திரும்பிச் செல்வது தான் தாங்கொணா துயர் தருகிறது
உனக்கான காலம் எழுதப்பட்டது தானே
எனக்கும் தான்
முன்னே செல்கிறாய் நீ பின்னாளில்
நாங்களும் வருவோம் பாதையில் எங்கு கண்டாலும் சிரித்து பேசி சலாம் சொல்லும் உன் பூ முகம் என்றும் என் மனக்கண்களில்
புத்தகம் அடக்கிய கைகளுடன் என் பதின்ம வயதில்
கல்வி கற்றுக்கொள்ள
என்னிடம் வந்தாய் நீ
பூஞ்சிட்டாகவே
நடை உடை பாவனை அத்தனையும் அம்சமாய் அமைந்திருந்த உன்னை விரும்பாமல் இருப்பார்களா..? மெல்லிய உடல்வாகு
பேச்சிலும் மென்மை
சிரிக்கும் பூமகம்
கண்களில் பரவசம்
பூஞ்சிட்டே முபஷ்ஷிரா
நீ பயணப்பட்டு விட்டாய்
மனது கணக்கிறது அன்பே வெறும் 21 தான் வயது எங்களைப் புறந்தள்ளி வல்லவன் உன்னை அழைத்துக் கொண்டான்
எல்லாம் நன்மைக்கே
விழி நிறைய வலி மட்டும் தான் உனக்காய் தந்து
உன்னை வழி அனுப்ப
என்னிடம் ஒன்றும் இல்லையடி
உன் குடும்பத்தாருக்கும்
உன் கூடப்படித்தவர்களுக்கும்
உன் பற்றி அறிந்தோர்
அனைவருக்கும்
இறைவன் பொறுமையை
வழங்கிவைப்பானாக...!!
துஆக்களை ஏந்துகிறேன் நிச்சயமாய்
உனக்கான மடலாய்
உன்னை வந்தடையும்
இன்ஷா அல்லாஹ்...!!
Fayasa fasil - writer
Comments
Post a Comment