எல்லா இடங்களிலும் புலமைப் பரிசில் பரீட்சை கதைகளாகவே இருக்கின்றன...
அல்ஹம்துலில்லாஹ்..! என்று ஒருவாறு பிற்போடப்பட்டிருந்த பரீட்சை நடந்தேறி பெறுபேறுகளும் வெளியாகிவிட்டன.
எனக்குள் பல எண்ணவோட்டம்.... அது ஒரு காலம்... ஒட்டமும் நடையுமாய் பாடசாலை விட்டதும் மேலதிக வகுப்புக்களுக்காய் எம் காலகள் நகர்ந்த காலம்.
பாடசாலை விட்டதும் பல புலமைப் பரிசில் வகுப்புக்கள் நடைபெறும். மேலதிக வகுப்பாக ஒரு வகுப்பை மாத்திரமே தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியுமான பொருளாதார நெருக்கடி. அமைதியான , குளிர்ந்த வீடு , சிவப்பு சீமெந்து தரை.. வீட்டைச் சுற்றி சில மரங்கள் ,செடிகள். வகுப்பின் நிறையப் பேர் அங்கு தான் சென்று படித்தோம். கண்ணாடி அணிந்த கண்டிப்பானவர். கண்டிப்பிலும் கரிசணை இருந்தது.ராசிக் சேர் அவர் . புலமைப் பரிசில் வகுப்புக்களுக்குப் பெயர் போனவர். "மின்சார சேவை கட்டணப் பட்டியல் தாளில் வரக்கூடிய சின்னம் எந்த சேவையுடன் தொடர்புபட்டது..?" இதுதான் வினா... கேள்விக்குப் பலர் பதில் சொல்ல முடியாமல் தவிக்க... "யாரின் வீட்டில் க்ரண்ட் இல்ல.. அவங்களுக்கு அடிக்க மாட்டேன்." சொல்லிட்டார்.. அப்பாடா....நான் தப்பியாகி விட்டது. காரணம் அப்போது எங்களது வீட்டில் க்ரண்ட் இருக்கவில்லை.. அதனால் சின்ன excuse கிடைத்தது. அருமையான மனிதர். அல்லாஹ் மேலும் அவருக்கு தேக ஆரோக்கியத்தை வழங்கி வைப்பானாக...!!!
க்ரண்ட் இல்லாவிட்டாலும் புலமைப்பரிசில் பரீட்சையை எழுதி ஐந்து புள்ளிகளினால் பரீட்சையில் தேறிவிட்டேன்.. அல்ஹம்துலில்லாஹ்..!!
Fb : Fayasa Fasil ...✍️
Comments
Post a Comment