இயற்கையோடு ஒன்றித்த நாட்கள் 
இன்னும் என் கண்களில்... 
அழகான பொழுதுகள்.. 
நம்பிக்கையூட்டும் வகுப்பறைகள்.. 
ஒன்றாய் அமர்ந்த கருத்தரங்குகள்.. 
ஆசை ஆசையாய் 
கற்ற  பாடங்கள் ..
ஐயப்பட்டு எழுதிய பரீட்சைகள் 
இந்த ரம்மியமான சூழலுக்காகவேனும் 
இன்னுமின்னும் நிறையவே 
பரீட்சைகள் எழுதலாம்.. 

என் வாழ்க்கையில் 
ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும்
பெரும் பங்கு வகித்த 
இந்த இடத்திற்கு 
என் மனது என்றும் 
நன்றிக்கடன் பட்டிருக்கிறது... 

ஊடறுத்துச் செல்லும் மகாவலியே 
உன் போலல்ல... 
இன்னும் நீண்டது 
எந்தன் பயணம்..! 

இணைந்திருப்போம் 
பல்கலையே 
இனிமேலும்.... 

Fayasa fasil - writer

Comments

Popular posts from this blog

ஷைமா பயணப்பட்டு விட்டாள்...!!

என் எழுத்துக்கு ஒரு தசாப்தம் நூல் வெளியீட்டு விழாவும் நூல் விமர்சனமும் - லுதுபியா லுக்மான்

be a shadow