வாழ்வதும் ஒரு கலை
மன அழுத்தம் என்பது எப்போது வருகிறது ..?!
எப்படி வருகிறது ..?!
எதனால் ..?! ஏன் ..?! என்ற பல கேள்விகளுக்கு என்னிடம் பதில் இல்லை.
சில நாட்களாக என் செயற்பாடுகள் மந்த கதியில் இருப்பதாக உணர்கிறேன். அது ஏன் என்று சிந்தித்து பார்க்கவும் விரும்பவில்லை. சிந்தனை செய்வதால் பல நன்மைகள் இருப்பது போலவே Over Thinking இன்னும் என்னை Over Tention ஆக்கிவிடுமோ என்றொரு பயம் என்னுள்...!
எப்போதும் எனக்கான Role Model நானே தான்.. சிலரைப் பார்க்கும் போது , அவர்களின் நடத்தைகளைப் பார்க்கும் போது , சிலரின் குணங்கண்டு அவற்றை உள்வாங்கிக் கொள்வதுமுண்டு.. ஆனால் அவர்களாக ஆக நம்மால் முடியாது. நமது policy வேறில்லையா..!?
முடிந்தவரை மனது விரும்பக்கூடிய , மனம் திருப்திப்படக்கூடிய விடயங்களில் என்னை ஈடுபடுத்திக் கொள்ள முயற்சிப்பேன்..
மனம் கொண்டதே மாளிகை அல்லவா....?!
எனக்கான situation memes , எனக்கான background music , எனக்கான mindvoice எல்லாம் தானாக நினைவுக்கு வரும்.. ஒற்றைச் சிரிப்பினில் கடந்து விடுவேன்.
ஒருவரின் செயற்பாடு இன்னொருவரின் செயற்பாட்டைப் பாதிக்கக் கூடாது என்பதில் உறுதியாயிருக்கின்றேன்..
எது எப்படியோ ....
அழகை இரசிப்பேன்..
ஆலோசனை ஏற்பேன்..
இரக்கம் காட்டுவேன்..
ஈன்றவர்களை கவனிப்பேன்..
உண்மை பேசுவேன்..
ஊண் விரும்புவேன்..
எழுதுதலைக் காதலிப்பேன்..
ஏற்றிவிட ஆசைப்படுவேன்..
ஐயங்களை தெளிவாக்குவேன்..
ஒற்றுமையை வழிப்படுத்துவேன்..
ஓசை வராமல் அழுவேன்..
ஔடதம் தவிர்ப்பேன்..
வாழ்க்கை பல சுவாரஷ்யம் மிகுந்தது.
வாழ்ந்து தானே அனுபவிக்க வேண்டும்.
உணர்ந்து வாழுங்கள்...
வாழ்வதும் ஒரு கலை தானே... !!!
Fayasafasil - Writer
Comments
Post a Comment