Posts

Showing posts from July, 2023

be a shadow

Image
*பிறர் மிதிக்க நினைக்கும்  புல்லல்ல நான்...!  பிறருக்கு நிழல் கொடுக்கப் பிறந்தவள் நான்...!* கிட்ஷனில் வார்த்த கவிதை இது..  பேனா... பேப்பர்...  எங்கே... ?!  பிறகு எழுதலாமோ... ?!  என யோசித்தேன்..  வேண்டவே வேண்டாம்...  பிறகு...,  மறதிக்குப் பிறந்தவள் என  எழுதி விடுவார்கள்...  நோட்பேட் இருக்க பயமேன்...  எழுதிட்டோம்ல....!!!  Fayasa Fasil  Pic : Google  #morngmotivation  #poem  #notpad  #writinglover  #beashadow
Image
"சத்தங்கள் பலவிதம்  அதில் நான் ஒரு விதம்" என்று கூறிக்கொண்டிருந்தார்.  உடல் நலக்குறைவால்  நேற்றைய தினம் மருந்தகம் சென்றிருந்தேன்.  தன் கவியால் பலரையும் மகிழ்வித்திக் கொண்டிருந்தார் அவர். உண்மையில் நல்ல மனிதர் நான் அறிந்த வகையில்...  கவி பாடுவதில் வல்லமை கொண்டவர். தமிழும் ஆங்கிலமும் அவருக்கு அத்துப்படி என்று கூறக் கேட்டிருக்கிறேன். கஹட்டோவிட்டாவின் மைந்தர் அவர். கவிதை பாடுவதில் அவருக்கு நிகர் அவரே தான். கொஞ்சம் மானசீகமாக உள நலக்குறைவால் அடிக்கடி பாதிக்கப்படுபவர். இருந்தாலும் நிறைந்த ஞாபக சக்தியும் , பரந்த அறிவும் கொண்டவர் என்பதை அவருடன் கதைத்தாலே விளங்கிக் கொள்ளலாம்.  "மகள்  இது ஒரு பகல்  உனக்கு கிடைக்கும் புகழ்"  அவர் அவ்விடம் கூறிய கவி.. இன்னும் நிறையச் சொன்னார். அவர் வாயின் வார்த்தைகள் அதிகமாக கவிதைகளாகவே வெளிவரும். அதில் அர்த்தமும் இருக்கும்....  வல்லவன் அல்லாஹ்.. அவருக்கு நிறைந்த ஆரோக்கியத்தை நல்குவானாக...!!  Fayasa Fasil  Pic : Google
Image
வயோதிபத்தை தொட்டவர்களுமல்ல..  வாலிபத்தை  விட்டவர்களுமல்ல..  அன்புக்கு பஞ்சமில்லாத  ஆத்மார்த்தமான ஜோடியது..  அன்றாடம் காய்ச்சி என்பது  பொருந்துமோ என்னவோ...  அன்று தொழில் செய்தால் அன்றைய தினம் சாப்பிடலாம் என்ற நிலை...  இருந்தாலும் குணத்தில்  எந்தவித குளறுபடிகளுமில்லை..  பணமில்லாவிட்டாலும் பரவாயில்லை  குணமிருக்கிறதே...  வாழட்டும்..  வாழ்த்துவோம்.. #happycouple  #lovebirds  Fayasa fasil - writer