வயோதிபத்தை தொட்டவர்களுமல்ல..
வாலிபத்தை
விட்டவர்களுமல்ல..
அன்புக்கு பஞ்சமில்லாத
ஆத்மார்த்தமான ஜோடியது..
அன்றாடம் காய்ச்சி என்பது
பொருந்துமோ என்னவோ...
அன்று தொழில் செய்தால் அன்றைய தினம் சாப்பிடலாம் என்ற நிலை...
இருந்தாலும் குணத்தில்
எந்தவித குளறுபடிகளுமில்லை..
பணமில்லாவிட்டாலும் பரவாயில்லை
குணமிருக்கிறதே...
வாழட்டும்..
வாழ்த்துவோம்..
#happycouple
#lovebirds
Fayasa fasil - writer
Comments
Post a Comment